இறகுகள் தொண்டு நிறுவனத்தின் மற்றொரு படைப்பான இறகுகள் அகாடமி ஸ்ரீரங்கம் புஷ்பக் நகரில் சிறப்பான முறையில் தொடங்கப்பட்டது இவற்றினை பாரதிதாசன் பல்கலைக்கழக டாக்டர் லட்சுமி பிரபா முன்னாள் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர், காவேரி மகளிர் கல்லூரியின் பேராசிரியை டாக்டர் நிலா

பிஷப் கீப்பர் கல்லூரி பேராசிரியர் ரவி, ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர். ஜெயச்சந்திரன் ஆங்கிலத்துறை, டாக்டர் அருண் பிரகாஷ் , பிரபாகரன், டிசைனர் துரை, இறகுகள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஜே ராபின் மற்றும் இறகுகள் அகாடமியின் நிறுவனர்.மரிய மெர்சி ஆகியோரைக் கொண்டு தொடங்கப்பட்டது.

 இந்த அகடமின் முக்கிய நோக்கம் தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்களுக்கு எல்கேஜி முதல் பிளஸ் டூ வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச மாலை நேர வகுப்பு மற்றும் அரசு பணித்துறைக்கு தயாராகும் மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை தரமான ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்