ஜூலை 20, 1924 அன்று, பிரான்சின் பாரிஸில் நடந்த எட்டாவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில், முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது. இதையடுத்து, அந்தப் போட்டியின் கடைசி நாளன்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு(FIDE) 1924ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த நாள் தான் சர்வதேச செஸ் நாளாக இன்று வரை கொண்டாப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள டாக்டர். ராமன் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக பிரத்தேகமாக செஸ் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த செஸ் போட்டிக்கு பல்லி தலைமை ஆசிரியர் லில்லி ஃப்ளோரா தலைமை தாங்கினார். மேலும் செஸ் போட்டி விளையாடுவதால் மாணவர்களின் அறிவு திறனும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும்,
அதனுடன் சேர்ந்து கல்வித்திறன் அதிகரிக்க ஒரு முக்கிய விளையாட்டாக இது கருதப்படுகிறது என ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோர்கள் அடுத்த மாவட்ட அளவிலான, மாநில அளவிலான நடைபெறக்கூடிய செஸ் போட்டியில் பங்கேற்க வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.