திருச்சி மாவட்டம் திருவரங்கம் சட்ட மன்ற உறுப்பினர் எம். எல்.ஏ பழனியாண்டி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி வயலூர் ரோடு சோமரசம் பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தலைமை பட்டாச்சார்யார் சுந்தர் பட்டர் அவர்கள் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று எம்எல்ஏ பழனியாண்டிக்கு மாலை அணிவித்து ஸ்ரீரங்கம் நம்பெருமாள் படத்தை வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஆசீர் வழங்கினார்.
இதேபோல் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி பிறந்த நாளை முன்னிட்டு லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன், திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் , தமிழர் தேசம் கட்சி தலைவர் செல்வகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம், வழக்கறிஞர் மருதையா, அரசு முதல் நிலை ஒப்பந்ததாரர் பெரியசாமி உள்ளிட்ட கட்சியினர், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். விழாவில் பங்கேற்க அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது…