திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், தமிழகத்தின் மிக உயர்ந்த கோபுரம் கொண்ட ஆலயமாகவும் திகழ்வது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். இக்கோவிலில் ஶ்ரீராமானுஜ திருமால் அடியார்கள் குழாமை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீரங்கம் கோவிலின் உள்ளே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஶ்ரீரங்கம் கோயில் உள்ளே கொடிமரம் முன்பு இருந்த அனுமன் சிலையை நான்கு அடி தூரம் நகற்றி வைத்துள்ளனர். அந்த சிலை 3000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்தது தற்பொழுது கொரோனா காலத்தில் அதனை நகர்த்தி வைத்துள்ளதாகவும், மீண்டும் அதே இடத்தில் அனுமன் சிலையை வைக்க வேண்டும்,
மேலும் ஶ்ரீரங்கம் ஶ்ரீரங்கநாதசுவாமி மூலவர் திருவடியை பராமரிப்பு என்ற பெயரில் சிதளம் செய்துள்ளனர். அதனை பழைய படி சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீ ராமானுஜர் திருமால் அடியார்கள் குலாமை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீரங்கம் கோவிலில் ஆரிய பட்டால் வாசலில் உள்ள தங்க கொடி கொடிமரம் முன்பு திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருதுநகர் , திருச்சி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆண்கள்,பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் ஜால்ரா வாசித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டக் காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் திவ்யா, ஸ்ரீரங்கம் காவல் நிலைய ஆய்வாளர் அரங்கநாதன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தைகள் ஈடுபட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் காவல்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.