அகில பாரத விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மாவட்ட பொது செயலாளர் சீனிவாசன் தலைமையில் இன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் E.O வேல்முருகனிடம் மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு இந்து சமய அறநிலை துறையின் சார்பில் இடைநிறுத்த தரிசனம் என்கிற அறிவிப்பு வருடத்திற்கு திருவிழா நாட்கள் மொத்தம் 13 நாட்கள் நீங்களாக மற்ற நாட்களில் தினசரி மாலை 3 மணி முதல் 4 மணி வரை பக்தர் ஒரு நபருக்கு ரூபாய் 300 விதம் கட்டண சீட்டு வசூலிக்கும் அறிவிப்பு பத்திரிக்கை செய்தி வாயிலாக படித்த ஆன்மீக பெரியோர்களுக்கும் பக்தர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.
ஆழ்வார்களும் ஆசார்யர்களும் வாழ்ந்து இறைவனை தரிசித்து தங்களின் ஆன்மாவை புனிதப்படுத்திய ஆலயத்தில் இந்து சமய அறநிலை துறையின் கீழ் நிர்வாகிக்கப்படும் ஆலயத்தில் இறைவனை காண பணமா என்ற கேள்விக்குறி எழுகிறது பிற மதத்தில் அவர்களின் இறைவனை காண பணம் செலுத்த தேவையில்லை ஆனால் இந்து மதத்தில் மட்டும் அதுவும் பெரும்பான்மையாக வாழக்கூடிய இறைவனை வணங்கக்கூடிய பக்தர்களுக்கு ரூபாய் முன்னுருவிதம் கட்டண சீட்டு வசதிப்பதை வசூலிக்கும் இத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பக்தர்களுக்கு தகுந்த வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றினால் தமிழகமெங்கும் சட்ட ரீதியாக போராட்டம் நடத்த தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்து கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது அகில பாரத விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட துணைத் தலைவர் சங்கர் ஜி திருக்கோவில் திருமடங்கு பொறுப்பாளர் அனந்த பத்மநாபன் ஸ்ரீரங்கம் பகுதி தலைவர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.