திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் எல்லை தெய்வமாய் இருக்கும் ஸ்ரீமத் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் சகல புவனங்களுக்கும் ஸ்ருஷ்டி ஸ்ருதி ஸம்ஹார த்ரோபவ அனுக்ரஹ மூர்த்தியாய் சகல பக்த கோடிகளுக்கும் அருள் பாலித்து கொண்டு இருக்கும் சோழ நாட்டின் காவிரி ஆற்றின் வடகறை பகுதியில் அமைந்துள்ள பூலோகம் வைகுண்டம் திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில் தென் திசையில் அக்னி மூலையில் அமைந்துள்ள அருள் பாலித்து கொண்டு இருக்கும்
அருள்மிகு பிடாரி ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோவில் மற்றும் பரிவார தெய்வங்களாக ஸ்ரீ துர்க்கை அம்மன் ஸ்ரீ பனையடி கருப்பு ஸ்ரீ சட்டாணி கருப்பு ஸ்ரீ சாம்ப மூர்த்தி ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ நாதர் ஸ்ரீ ஒண்டிக்கருப்பு ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ பட்டவன் ஸ்ரீ சந்தன கருப்பு ஸ்ரீ உத்தரக கருப்பண்ண சுவாமி ஸ்ரீ மதுரை வீரன் மற்றும் வீரேஸ்வரம் பிடாரி ஸ்ரீ வீர காளியம்மன் கோவில் நூதன ஐந்தடுக்கு ராஜகோபுரம் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. முன்னதாக கடந்த 31ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து காவிரி ஆற்றில் இருந்து திருத்தப்படும் பக்தர்களால் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்த நடைபெற்றது. மேலும் நேற்று ஒன்றாம் தேதி காலை இரண்டாம் கால பூஜை மாலை மூன்றாம் கால பூஜையும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை நாலாம் ஹஜ்கால பூஜைகள் நடைபெற்று புனித நீர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு ராஜகோபுரம் விமானத்தில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அதனைத் தொடர்ந்து பக்த கோடிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வீரேஸ்வரம் பிடாரி ஸ்ரீ வீரமா காளியம்மன் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.