திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி கடந்த (13.12.2023) முதல் (22.12.2023) வரை பத்து திருவிழாவாகவும், (23.12.2023) ஆம் தேதி முதல் (02.01.2024) ஆம் தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது. (23.12.2023) ஆம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படவுள்ளது. திருச்சி மாநகரின் மிக முக்கியமான திருவிழாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிக்காக ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவில் ரெங்கவிலாஷ் மண்டபம் அருகில் மாநகர காவல்துறை சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையின் திருப்பணிகள் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் இன்று காலை ஆய்வு செய்தனர் உடன் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரியப்பன், திருச்சிராப்பள்ளி மண்டல இணை ஆணையர் / தக்கார் பிரகாஷ், தஞ்சை மண்டல இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர்கள் இரவிச்சந்திரன், ஹரிஹரசுப்ரமணியன் , லட்சுமணன்,தலமை பொறியாளர் பெரியசாமி , தலமையிடத்து செயற்பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.