திருச்சி தென்னூர் அண்ணா நகரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ உக்கிர காளியம்மன், ஸ்ரீ சந்தன கருப்பு வகையறா, பங்குனி தேர் திருவிழா மற்றும் 42 ஆம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. கடந்த ஒன்றாம் தேதி காளி வட்டம் அம்பாள் புறப்பாடு நிகழ்ச்சியும் இரண்டாம் தேதி சுத்த பூஜை வீதி உலா நிகழ்ச்சியும் மூன்றாம் நாளான இன்று திருத்தேர் கோவிலில் இருந்து மந்தைக்கு சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் முக்கிய நிகழ்வான குட்டி குடித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட கிடாக்கள் பக்தர்களின் வேண்டுதலுதலுக்காக பலியிடப்பட்டது
மேலும் பலியிடப்பட்ட ஆடுகளின் ரத்தத்தை மருளாளி குடித்து அருள் வாக்கு அளித்தார். இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி பள்ளி அருகே மாபெரும் அன்னதானம் இன்று நடைபெற்றது இந்த அன்னதானத்தை மாநகராட்சி மேயர் அன்பழகன் தொடங்கி வைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.