இந்தியாவின் 79ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீ செங்குலத்தான் குழந்தலாயி அம்மன் அகுமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் நடத்தும் 5வது மாநில அளவிலான சிலம்பப் போட்டி திருச்சி உறையூர் சேஷ ஐய்யங்கார் நினைவு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது.

 இந்த போட்டியினை ஸ்ரீ செங்குளத்தான் குழந்தலாயி அம்மன்சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் நிறுவனர் சிலம்ப ஆசான் குமரேசன் தலைமை தாங்கினார் . இந்த போட்டியினை திமுக கலை இயக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் புதுகை ஆலங்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான எழில்மாறன் செல்வேந்திரன் மற்றும் 9வது,வார்டு மாமன்ற உறுப்பினர் நாகலட்சுமி நம்பி MC ஆகியோர் சிலம்பப் போட்டியை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினர்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளாக நடந்த சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்