பெண்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் பலன்களைப் எடுத்துரைக்கவும், உடல் சுறுசுறுப்புடன் இயங்கும் முயற்சியாக திருச்சி புனித சிலுவை தன்னாட்சிக் பெண்கள் கல்லூரி சார்பில் “ரன் ஃப்ளோ” என்ற தலைப்பில் 4 கிலோமீட்டர் தூர மினி-மராத்தான் போட்டி இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை போலீஸ் கமிஷனர் காமினி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அருகில் கல்லூரி முதல்வர் முனைவர் அருள் சகோதரி இசெல்லா ராஜகுமாரி, பேராசிரியைகள் மற்றும் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.
இந்த ரன் ஃப்ளோ” என்ற 4 கிலோமீட்டர் தூர விழிப்புணர்வு மினி-மராத்தான் போட்டியானது திருச்சி செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் தொடங்கி மேஜர் சரவணன் நினைவு ரவுண்டானா வழியாக ரெனால்ட் ரோடு, கோர்ட் சாலை, தென்னூர் சாலை, கோயினூர் சிக்னல் சென்று அங்கிருந்து மெயின் கார்டு கேட் வழியாக கல்லூரியை சென்று அடைந்தது. மேலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசும், பதக்கமும் கொடுக்கப்பட்டது. அதன் படி முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.5,000, இரண்டாமிடம் 3,000, மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு 1,000, முதல் 100 பேருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் திருச்சி தில்லை நகர் ஸ்வேதா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, இளம் இந்தியக் கூட்டமைப்பு மற்றும், ஹியர் ஜாப் ஆகியோர் பங்கேற்றனர்.இந்த மினி மாரத்தான் விழிப்புணர்வு போட்டியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். முதலிடம் பொருளாதாரத்துறை மாணவி ஆஷிகா, இரண்டாவது இடம் கணினி அறிவியல் துறை மாணவி செபஸ்டினா, மூன்றாம் இடம் தமிழ்த் துறை கோபிகா ஆகியோருக்கு புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் இல்லத் தலைவி அருள்சகோதரி லில்லி மேரி டேவிட், செயலர், முதல்வர்,திருச்சி, ஸ்வேதா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மற்றும் மகளிர் மருத்துவ ஆலோசகர், டாக்டர்.சுவாதி நேதாஜி, லியர்சாப் மேலாளர் லெனின்,இளம் இந்தியக் கூட்டமைப்பின் தலைவர் ராஜேஷ்,இளம் இந்தியாவின் பயிற்சியாளர் லெனின் போன்றோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டு பரிசுகளை வழங்கினார்.