தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மாநில கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஒருங்கிணைப்பாளர் மயில் கூறுகையில்:- பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், இது தொடர்பாக ஆராய தமிழ்நாடு அரசு சார்பில் மூன்று நபர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு முழுமையாக செயல்பட்டதாக தெரியவில்லை. அதனை காரணமாக வைத்து அந்த குழுவின் கால அளவை நீட்டிக்க கூடாது. இடை நிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்,  ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை தடுக்கும் அர்சாணை 243 ஐ ரத்து செய்ய வேண்டும். ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும். தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு தணிக்கை தடை என்கிற பெயரில் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். அதனை திரும்ப பெற வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதில் நிரந்தர பணியில் ஆசிரியர்கள் அமர்த்தப்பட வேண்டும்,

ஓய்வுபெற்றால் ஏற்கனவே கல்வி ஆண்டு முடியும் வரை ஆசிரியர்கள் பணியில் இருப்பார்கள் ஆனால் தற்போது பணி ஓய்வு பெற்றால் உடனடியாக பணியில் இருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்கிற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப் படுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் எனவே கல்வி ஆண்டு முடியும் வரை ஓய்வு பெரும் ஆசிரியர்கள் பணியில் இருப்பதற்கு அறிவிப்பை வெளியிட வேண்டும், ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவது தொடர்பான தகுதி தேர்வு வழக்கு உச்ச நீதிமன்றத்திக் நிலுவையில் உள்ளது. அதனை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆசிரியர்களிடம் உள்ளது இந்த 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு தினங்கள் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்