தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திடக் கோரியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்தை சரி செய்திடக் கோரியும், 243 அரசாணையை உடனே ரத்து செய்திடக்கோரியும் தணிக்கை தடை என்ற பெயரில் பென்சனுக்கு ஊக்க ஊதியத்திற்கும் வேட்டு வைப்பதை தடுத்து நிறுத்திட கோருவது உள்ளிட்ட
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொடர் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்திற்கு டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் குமரகுருபரன் மாவட்ட செயலாளர்கள் செல்வகுமார், அந்தோணி எட்பட் ராஜ், கல்யாணி சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபடும் என்ற தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.