10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் தமிழக முழுவதும் நேற்றிலிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகில் தொடர் போராட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் மல்லிகா பேகம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் கோரிக்கை விளக்க உரையை மாவட்ட செயலாளர் சித்ரா வழங்கினார்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில்பள்ளி, கல்லூரிகளுக்கு வருவதுபோல் அங்கன்வாடியிலும் 2முதல் 6வயது வரை பயிலும் மாணவர்கள் நலன் கருதி மேமாதம் முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும், எரிவாயு சிலிண்டருக்கான தொகையை பில்லில் உள்ளவாறு முழுமையாக ரூ.1205 வழங்க வேண்டும், 1993-ல் பணிக்கு வந்த பணியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், 10 வருடம் பணி முடித்த ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு இன்கிரிமெண்ட் வழங்க வேண்டும், 5வருடம் பணி முடித்த மினி மைய ஊழியர்களுக்கு முதன்மை மைய ஊழியராக பதவி உயர்வு வழங்க வேண்டும், 10 ஆண்டு பணி முடித்த உதவியாளர்களுக்கு எந்தவிதமான நிபந்தனையுமின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்,
அங்கன்வாடி மையங்களின் மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும், லோக்கல் டிரான்ஸ்பர் உடனடியாக வழங்க வேண்டும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 மையங்கள் பார்ப்பதால் மன உலைச்சலுக்கு ஆளாகி வருவதை சரி செய்யவும், உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
பிரதான மையங்களை மினி மையமாகவும், மினி மையத்தை பிரதான மையத்துடன் இணைக்கும் திட்டத்தை கைவிடு.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில்மாநில செயற்குழு உறுப்பினர்கலைச்செல்வி, மாவட்ட பொருளாளர் ராணி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், வட்ட கிளை நிர்வாகிகள், முன்னனி ஊழியர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.