திருச்சி எடமலைப்பட்டிப்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பிராட்டியூர் டீ கடை அருகில் கடந்த 26.06.2013ம் தேதி இரவு சங்கர் மற்றும் சந்தோஷ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது டாட்டா ஏசி ஓட்டுநருடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாமலைவாசன் உள்ளிட்ட 5 நபர்கள், பிராட்டியூர் டி.டி.கோச் அருகில் டிபன் கடை நடத்தி வரும் ராஜேந்திரன் (35), என்பவரை தாக்கியும், அவரது டிபன் கடை மற்றும் பொலிரோ வாகனத்தையும் அடித்து சேதப்படுத்தியள்ளனர்.
காயம்பட்ட ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிப்புதூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவத்தில் காயம்பட்ட ராஜேந்திரன் என்பவரின் உடன் பிறந்த தம்பியான ராஜமாணிக்கம் வயது 28 என்பவர் அவருடைய ஆதரவாளர்களுடன் கடந்த 2013-ம் ஆண்டு எடமலைப்பட்டி புதூர் பெரிய கொத்தமங்கலம் பொது குளம் அருகில் வைத்து, அரிவாள் மற்றும் கட்டைகளால் மாமலை வாசனின் நண்பரான சுப்பன் (எ) பாலசுப்பிரமணியன் என்பவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 10 பேர் குற்றவாளிகளாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.மேலும் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக திருச்சி மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த எட்டு வருடங்களாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது இந்நிலையில்
திருச்சி நீதிமன்றத்தில் இன்று சுப்பன் என்கிற பாலசுப்பிரமணியன் என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராஜமாணிக்கம், வடிவேலு, சங்கர், மணிவேல், தர்மன், நீலமேகம் ,பிரபு, சம்பத், மோகன்ராஜ், ஜம்புலிங்கம் ஆகிய 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தங்கவேலு தீர்ப்பளித்தார்.