தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகாமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாநிலத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார்
மாவட்ட தலைவர் ஜெகநாதன் செயலாளர் காமராஜ் பொருளாளர் முத்து துணை தலைவர்கள் தங்கராஜ் தர்மலிங்கம் இடைச் செயலாளர்கள் பெரிய கால் வெங்கடேஷ் ஆகியோர் முன்னில வைத்தனர். இதில் சம்பள உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கூட்டுறவு மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.