அனைத்து வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் வங்கி தொழில் சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ராமராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டேட் பேங்க் ஊழியர் சங்க துணை பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரியும், வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்கள் வேலை நாட்களாகவும் சனி ஞாயிறு விடுமுறை நாட்களாக அறிவிக்க கோரியும், கிராஜுவெட்டி சட்டத்தை மாற்றி அமைக்க கோருவது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24 மற்றும் 25ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.