திருச்சி விமான நிலையத்தை அடுத்து உள்ள குண்டு பர்மா காலனி பகுதியில் இரண்டு வயது குழந்தை ஒன்று தவறுதலாக வீட்டில் கிடந்த ஊக்கை விழுங்கியது. மேலும் வலியால் கதறி அழுத குழந்தையை பெற்றோர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது தொண்டை பகுதியில் ஊக்கு திறந்த நிலையில் இருப்பதால் உடனடியாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர் அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது குழந்தையின் தொண்டையில் ஊக்கு திறந்த நிலையில் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அரசு மருத்துவமனை காது மூக்கு தொண்டை நிபுணர் டாக்டர் அண்ணாமலை தலைமையில் மருத்துவக் குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்து குழந்தையின் தொண்டையில் இருந்த ஊக்கை அகற்றினர் தற்போது குழந்தை நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.