திருச்சி மாவட்டத்தில் வெங்காயத்தின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த 20 வருடங்களுக்கு இல்லாத அளவிற்கு விலையானது தற்பொழுது சரிந்து விற்பனையாகி வருகிறது. அதன்படி இன்று வெங்காய மண்டியில் ஒரு கிலோ சின்ன வெங்காயமானது 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகிறது. திருச்சி மாவட்டத்திற்கு நாள் ஒன்றுக்கு நூறு டன் சின்ன வெங்காயம் பெரம்பலூர் கரூர் நாமக்கல் பகுதியில் இருந்து வருகிறது.
இதே போல் கர்நாடகாவில் உள்ள மைசூர்,குண்டல் வேர் பகுதியில் இருந்து 50 டன் சின்ன வெங்காயம் வருகிறது. திருச்சி மாவட்டத்திற்கு நாள் ஒன்றுக்கு சின்ன வெங்காயம் 150 டன் வருகிறது இதே போல் பெரிய வெங்காயம் 500 டன் வரத்து உள்ளது. கர்நாடகாவில் இருந்து 100 டன் மற்றும் மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து 400 டன் என 500 டன் தினமும் வரத்து வருகிறது. பெரிய வெங்காயத்தை பொறுத்தவரை ஒரு கிலோ 5 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை விற்பனையாகிறது.
இதுகுறித்து திருச்சி வெங்காய கமிஷன் மண்டி செயலாளர் தங்கராஜ் கூறுகையில்..,
கடந்த 20 வருடங்கள் இல்லாத அளவிற்கு தற்பொழுது நல்ல வெங்காயத்தின் விலை 5 ரூபாய்க்கு விற்பனையாகிறது மலை உள்ளிட்ட எந்த பாதிப்புகளும் இல்லாமல் இப்படி ஒரு குறைவான விலைக்கு விற்பனையாவது 20 வருடங்கள் இல்லாத விற்பனை சரிவு. இந்தியா முழுவதும் கர்நாடகா குஜராத் மத்திய பிரதேசம் பீகார் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே வெளி சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் வெங்காயத்தின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதே போல் இன்னும் இரண்டு மாதங்களுக்கு விலை ஏற்றம் அடையாது இதே நிலையே தொடரும். திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 500 டன் ஒரு நாளிற்கு வரத்தாக உள்ளது அதில் 200 டன் மட்டுமே விற்பனை ஆகிறது 300 டன் வெங்காயம் தேக்கம் அடைகிறது என தெரிவித்தார்.