பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, திருச்சி மாவட்டத்தில், ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் தொகுதிகளில், நேற்று முன்தினம், நடைபயணம் மேற்கொண்டார். நேற்று மாலை, திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார். இரவு 7:40 மணிக்கு, காந்தி மார்க்கெட் பகுதியில் நடைபயணத்தை நிறைவு செய்து, அவர் பேசினார்…
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்…கோயிலுக்கு வெளியே யார் இருக்க வேண்டும் தமிழகத்தில் மற்ற தலைவர்கள் எங்கு இருக்க வேண்டும் பெரியாரைப் பொருத்தவரை பாஜகவில் நிலைப்பாடு என்ன என்பதை இன்று கூட்டத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறேன்
திமுகவை பொறுத்தவரை அவர்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன . திமுக திராவிட கருத்து என்பது ஒரு விஷ கருத்து மதங்களைப் பிரித்து ஜாதிகளை பிரித்து பிழைப்பு நடத்துவது 70 ஆண்டுகால திராவிட அரசியல் எல்லா இடங்களிலும் நான் அவர்களை விமர்சனம் செய்கிறேன் புள்ளி விபரங்களுடன் பேசுகிறேன் தமிழக பள்ளி கல்வித்துறை எப்படி இருக்கிறது என பேசுகிறேன்
பாஜக பொருத்தவரை எந்த மதத்திற்கு எதிரானது அல்ல நானும் அப்படி தான் ஒவ்வொரு இந்துவும் கோயிலுக்கு எப்படி செல்ல வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கும் அதை ஜனநாயக ரீதியில் 2026 ஆம் ஆண்டு செய்து காட்டுவோம். 2026 பாஜக ஆட்சிக்கு வரும் என ஆர் எஸ் பாரதியும், கனிமொழியும் காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் அது கண்டிப்பாக நடக்கும்.. என தெரிவித்தார்