திருச்சி மண்டலம் இரு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் தொழிற்சங்கம் மற்றும் தமிழ்நாடு இருசக்கர வாகனப் பழுது நீக்குவோர் தலைமை நல சங்கம் இணைந்து நடத்திய 22 வது ஆண்டு பொதுக்குழு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி சுப்ரமணியபுரம் சங்கீத் மஹாலில் இன்று நடைபெற்றது.
இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார் மாநில செயலாளர் சசிகுமார் மாநில பொருளாளர் ஜமால் முகமது திருச்சி மண்டல இணைச் செயலாளர் அடைக்கலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பொதுக்குழு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாக:- ஜி எஸ் டி கவுன்சிலிங் கூடும்போது ஆட்டோ மொபைலினுடைய ஜிஎஸ்டி வரியை கூட்டாமல் 28 சதவீதம் உள்ளதை பொதுமக்களை பாதிக்காத அளவிற்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதனை 18 சதவீதமாக வரி விலக்கு அளிக்க வேண்டும்.
தொழிலாளர் நிறுவனங்கள் வழங்கக்கூடிய சலுகைகள் எங்களுக்கு தடையாக இருக்கக்கூடிய லாட்டரி தடை சட்டத்திற்கு தமிழக அரசு எங்களுக்கு விலக்கு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். தமிழ்நாட்டில் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தொழிலாளர்களுக்கு உரிய திட்டங்களை மாநில அரசு தர வேண்டும். மத்திய அரசு வழங்கக்கூடிய பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தொழிலாளருக்கு முறையாக சேர்வதில்லை அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில தலைவர் செல்வம் மற்றும் மாநில செயலாளர் சசிகுமார் தெரிவித்தனர்.