3-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழக அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய வட்டார தலைநகர் ஆர்ப்பாட்டம் சென்ற 27ஆம் தேதி நடைபெற்றது அதைத் தொடர்ந்து இன்று 1ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் வளர்ச்சித் துறையில் அறிவித்துள்ள கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2024.25-ஆம் ஆண்டிற்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, மேலும் ஊரகப் பகுதிகளில் பழுது அடைந்த 2001 ஆம் ஆண்டிற்கு முன்பு கட்டப்பட்ட சாய்தள வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகள் பழுது நீக்கம் செய்யவும் திட்டமிடப் பட்டுள்ளது, தமிழ் நாட்டை குடிசைகள் அற்ற மாநிலமாக மாற்றவும் பழுதடைந்து உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களின் நலன்களை பாதுகாத்திட அவ்வீடுகளை பழுதுகள் நீக்கி புதுப்பித்து தர மேற்கொள்ளப் பட்டுள்ள இத்திட்டங்களை போதிய ஊழியர்கள் கட்டமைப்பு வசதிகள் இன்றி நடைமுறைப்படுத்த வலியுறுத்தும்,

தமிழக அரசின் செயல்பாடு சுவர் இல்லாமல் சித்திரம் வரைய நிற்பந்தம் அளிக்கும் செயலாகவே உள்ளது, இவ்விரு திட்டங்களையும் தமிழ்நாட்டின் அனைத்து கிராமப்புறங்களில் செம்மையாக செயல்படுத்திட கீழ்கண்ட கோரிக்கையை நிறைவேற்றி தர தமிழக அரசு வலியுறுத்தி திட்டமிடப்பட்டுள்ள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சங்க உறுப்பினர்களால் நடைபெற்றது இதில் மூன்று அம்ச கோரிக்கையான கே.கே.ஐ. மற்றும் ஆர்.ஆர்.எச்.திட்டங்களுக்கு போதுமான ஊழியர்கள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும், கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளர்கள் தேர்வு குறித்தான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உடனே வெளியிட வேண்டும், கே.கே. ஐ திட்ட பயனாளர்கள் பட்டியல் மற்றும் ஆர் ஆர் எச் பயனாளர்கள் பட்டியலை இறுதி படுத்த உரிய கால ஆகாசம் அளித்திட வேண்டும், உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த கவனத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்