சிலம்ப உலக சம்மேளனத்தின் சார்பாக மாணவ-மாணவிகளுக்கு தகுதி பட்டை வழங்கும் விழா திருச்சி நேஷனல் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.
சிலம்ப உலக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் திருச்சி புதுக்கோட்டை கரூர் கோயம்புத்தூர் சென்னை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து 6 வயது முதல் 30 வயது வரை உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்று
தங்கள் தனித் திறமையான சிலம்பாட்டம், இரட்டை சிலம்பம் சுற்றுதல் போன்ற கலைகளை வெளிப்படுத்தினர். இந்த சிலம்ப தேர்வில் பங்கு பெற்ற சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப
சிலம்ப உலக சம்மேளனத்தினால் அங்கிகரிக்கப்பட்ட சிலம்ப பாடத்திட்டத்தினை சரியான முறையில் செய்து காண்பித்து தேர்வில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் தகுதிக்கேற்ப வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, நீலம், பிங்க், ப்ரவுன் மற்றும் இறுதியாக கருப்பு கலர் பட்டைகள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து சிலம்ப உலக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்,
தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள சிலம்ப மாணவ மாணவிகளுக்கான அரசுத் துறையில் வேலை வாய்ப்பிற்கான இட ஒதுக்கீடு 3% அளித்துள்ளதாகவும் மேலும் நமது மத்திய அரசு கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நமது சிலம்பக் கலையை இணைத்து அதற்காகவும் சிலம்ப உலக சம்மேளனத்தின் சார்பில்
தமிழக மற்றும் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு சிலம்பத்தை பாடமாக கற்றுத் தர அரசு ஆவன செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளார்.