15வது ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்கவும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடவும், ஓய்வு பெற்றவுடன் பணபலன், ஒப்பந்த பலன்களை வழங்கி ஓய்வூதிய உயர்வு, பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு இணையாக டிஏ உயர்வு, மற்ற துறைகளைப் போல் மருத்துவ காப்பீடு பெறவும், தனியார்மய காண்ட்ராக்ட் முறையை முறியடிக்கவும், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வரவுக்கும், செலவிற்குமான வித்தியாச தொகையை பெறவும், வாரிசு வேலையை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட 6-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு கண்டன வாயிற் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் பனிமனை தலைவர் ஜான் ஆச்சரியம் தலைமையில் இன்று நடைபெற்றது. பணிமனை செயலாளர் ராமையா, உதவி செயலாளர் பூண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அருள் தாஸ் கண்டன உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து மாநில தலைவர் அருள் தாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 6-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி ஒன்பதாம் மற்றும் பத்தாம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் நடத்தியது. வேலை நிறுத்தத்தை தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது பொங்கல் நேரம் என்பதால் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்யுங்கள் தீர்வு ஏற்படாவிட்டால் மீண்டும் போராடுங்கள் என நீதிமன்றம் உத்தரவிட்டது வேலை நிறுத்தத்துக்கு பின் தொழிலாளர் துறையில் நடைபெற்ற 3 கட்ட பேச்சு வார்த்தையில் நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு எவ்வித தீர்வும் இன்று வரை எட்டப்படவில்லை. இந்நிலையில் வருகிற ஜூன் 24ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்பந்தமான அறிவித்துள்ளது. அதற்குள்ளாக தமிழக அரசு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் செம்மேளனத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் அப்படி செய்து தராவிட்டால் கண்டிப்பாக போராட்டம் தொடரும் அதன்படி இன்று தொடர் உண்ணாவிரதத்தை விளக்கி வாயிற் கூட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.