இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தின விழா இந்திய முழுவது கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போன்று திருச்சி ரயில்வே கோட்டம் சாா்பில் கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், கோட்ட மேலாளா் எம்.எஸ்.அன்பழகன் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தாா்.
தொடா்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர் ரயில்வே பாதுகாப்பு படையில் சிறப்பாக பணியாற்றிய மீனா, தமயந்தி, சிவகுமார், ஸ்ருதி ராஜ் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்
அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்களின் பைக் சாகசம், வீராங்கனைகள் பங்கேற்ற அதிநவீன துப்பாக்கி சாகச நிகழ்ச்சி மற்றும்
ராக்கி, மேக்ஸ், டான் என்ற மூன்று மோப்ப நாய்கள் பயிற்சியாளர் தமிழ் மொழி மற்றும் சைகைகளில் கொடுக்கப்பட்ட கட்டளைக்கு ஏற்ப கீழ் படிந்து நடந்துகொண்டு பாராட்டை பெற்றது தொடந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.