75வது சுதந்திர நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தியாகி ராஜன் இல்லத்தில் அருகிலிருந்து உப்பு சத்யாகிரக பாத யாத்திரை வேதாரண்யத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் துவங்கியது. முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு தலைமையில் துவங்கிய பாத யாத்திரையை முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், திருச்சி மாவட்ட தலைவர்கள் ஜவஹர், கோவிந்தராஜ் கலை மற்றும் கட்சி நிர்வாகிகள் சுப.சோமு, சரவணன், முன்னாள் மேயர் சுஜாதா, மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ், நிர்வாகிகள் மகேந்திரன், முரளி உட்பட 200கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எந்த அளவுக்கு நம் உரிமைகள் மீது கை வைத்ததை எதிர்த்துப் போராடினோமே இந்த காலகட்டத்தில் உணர்ந்து கொள்ள வேண்டும். நமது சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகிறது மொழி சுதந்திரம், பேச்சு சுதந்திரம், உணவு பழக்க வழக்கம், எழுத்துச் சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோனது உணர்ந்து 92ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய மக்கள் வளர்த்து வந்த போராட்டத்தினை உணர்வை மீண்டும் நினைவு கொள்ள வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நடைபயணம் அமைந்திருக்கிறது. இது வெற்றிப் பயணமாக அமைய வாழ்த்துகிறேன்.
2024 தேர்தலுக்கான முன்னோட்டமாக இது இருக்குமா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் 2024 தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த பயணத்தை வைத்துக் கொள்ளலாம் என கூறினார்.