திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் திமுக ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டன . ஆனால் அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்பாக கே.என்.நேரு தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்ததும். உடனடியாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திருச்சியில் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரான கே.என்.நேரு பஞ்சப்பூரில் ஒருங்கினைந்த பேருந்து நிலையம் அமைக்கும் இடத்தினை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.