மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக மே தின பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி உறையூர் ஜெயந்தி பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து பேரணி உறையூர் வாலாஜா சாலை வழியாக குறத்தெரு வந்தடைந்தது.
அங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்டச் செயலாளர் ஜீவா ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்தினர். மாவட்ட பொருளாளர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.
கண்டன உரையை ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் மணலிதாஸ், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், ஜனநாயக சமூகநல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கம் சார்பாக சைனி, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் போஜக்குமார்.
அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில பொருளாளர் சுரேந்திரன், சமூக நீதிப் பேரவை நிறுவனர் ரவிக்குமார். தமிழ் தேச மக்கள் முன்னணி மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கென்னடி, ஆகியோர் உரையாற்றினார்கள்.
மேலும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் கோவன் மற்றும் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன் ஆகியோர் சிறப்பு உரையாற்றினார்கள்.
இந்த பேரணியில் மாணவன் மீனவன் விவசாயி தொழிலாளி இவர்களை ஒழிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் போன்று வேடமனிந்து பேரணியாக வந்தனர். மகஇக கலைக்குழு தோழர்கள் புரட்சிகர பாடல்களை பாடினர். இப்பேரணி ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.