புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்துடன் வந்து மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவரங்கம் ராஜ கோபுரம் அருகில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் மற்றும் CITU ஆட்டோ சங்க ஓட்டுனர்களும் இணைந்து பல வருடங்களாக இங்கு ஆட்டோ ஓட்டி வருகின்றோம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மாநகராட்சி மற்றும் காவல்துறை அனுமதி பெறாமல் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்டோ சங்கம் என திருவரங்கத்தை சுற்றி பல பகுதிகளில் போர்டு வைத்து சவாரி ஏற்றி வருகின்றனர்.
குறிப்பாக ஸ்ரீரங்கம் ஆட்டோ ஸ்டாண்டில் அத்துமீறி பிஜேபி போர்டு வைத்த பழனியப்பன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்,
இதை தடுக்க முயன்றதால் முன்பு பிரச்சனை வெடித்தது. மேலும் காவல்துறை அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இதற்காக ஏற்கனவே ஆட்டோ சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தோம். தற்போது வரை உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மீண்டும் ஆட்சியரிடம் மனு கொடுக்க ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்துடன் வந்து மனு அளித்தனர்.