பிஎஸ்என்எல் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திருச்சி பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நாடு தழுவிய தர்ணா போராட்டம் இன்று காலை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக 1. 1. 2007 முதல் இ 1 ஏ ஊதிய விகிதத்திற்கு பதிலாக இ2 ஊதிய விகிதமும், இ 2 ஏ ஊதிய விகிதத்துக்கு பதிலாக இ 3 ஊதியவிகிதத்தையும் உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவிகித ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட வேண்டும். 7.8.2022 அன்று நடைபெற உள்ள ஜே டி ஓ இலாகா தேர்வும், இதர இலாகா தேர்வுகளும் 31.1. 2020 அன்று உள்ள காலிப்பணி இடங்களை வைத்தே நடத்தப்பட வேண்டும்.
பரிவு அடிப்படையில் பணி வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பேக்லாக் காலி பணியிடங்களை, காலதாமதமின்றி உடனடியாக நிரப்ப வேண்டும். 27.10.2021 அன்று ஏயூஏபியுடன் நடைபெற்ற சந்திப்பின்போது சிஎம்டி பிஎஸ்என்எல் கொடுத்த நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் இன்று நடந்தது.
இந்த போராட்டத்திற்கு எ.ஐ. ஜி.இ. டி .ஓ.ஏ செந்தில்குமார் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் இயூ அஸ்லாம் பாஷா துவக்க உரையாற்றினார். இதில் ஏ.ஐ. பி.எஸ். என்.எல்.இ. ஏ. சசிக்குமார், அசோக்குமார், எஸ்.இ.டபுள்யூஏ. பி.எஸ்.என்.எல் தாமரை கண்ணன், சரவணன், டி.இ.பி.யூ சுப்பிரமணியன், பிஎஸ்என்எல்இயூ முருகேசன், செயலாளர் சுந்தர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக எஸ்.என்.இ.ஏ. சக்திவேல் வரவேற்றார். முடிவில் என்.எப்.டி.இ மாநில தலைவர் காமராஜ் நிறைவுரை ஆற்றினார். இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.