தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், திருச்சி காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை முன்னிட்டு போக்குவரத்தை மாற்றி அமைத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவிரி பாலம் பராமரிப்பு பணிகளைத் தொடங்கி விரைந்து முடித்திடவும், மக்களுக்கு போக்குவரத்திற்கு இடையூறின்றி மாற்று வழியில் செல்வதற்கான ஆலோசனைகளையும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் வழங்கினார். அருகில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளர் கிருஷ்ணசாமி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
திருச்சி காவிரி பாலம் பேரிங் மாற்றி சரி செய்யப்பட உள்ளது. இதனால் 5 மாதங்களுக்கு இந்த பாலத்தின் வழித்தடத்தை பயன்படுத்த முடியாது. தற்காலிகமாக இருசக்கர வாகனங்கள் மற்றும் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் பணிகள் நடைபெற உள்ளதால் வேறு வழித்தடத்தில் போக்குவரத்து எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து கலெக்டர் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மேம்பாலத்தின் விரிவான திட்ட அறிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரைவு படி புதிய பாலத்திற்கு 8 மாத கால அவகாசம் விடப்பட்டுள்ளது அதில் தற்போது பாலத்தின் கீழ் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மற்ற வேலைகள் இன்னும் ஐந்து மாதத்தில் நிறைவடையும் இந்த புது பாலம் 40 ஆண்டுகள் தாங்கும் காண வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.