திருச்சி மாவட்டத்தில் வேளாண் விற்பனை மையங்களில் யூரியா, பொட்டாசியம் மற்றும் உரங்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைக்காததாலும், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரையிலும் இழப்பீடு வழங்கப்படாததை கண்டித்து இன்றைய தினம் தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் உரசாக்குகளை கையில் ஏந்தியபடியும், அழுகிய வாழை மரங்களை கையில் வைத்துக் கொண்டும் தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கோஷம் எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மேலும் நெல்லுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய், வாழைக்கு 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், கரும்பு டன்னுக்கு 4000 ரூபாய் வழங்க வேண்டும்,
17 சதவீதம் ஈரப்பதம் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற உணவுத்துறை அமைச்சரின் அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும் இதனை மாற்றி 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.