இந்திய ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்பட்டவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம். இவர் 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த பொக்ரான் – II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக முக்கிய பங்காற்றினார். மேலும் இந்திய குடியரசு தலைவர் பதவி வகித்து மறைந்தார்.
அவரின் 91-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரம் அருகே சித்திரை வீதி பகுதியில் உள்ள டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மறைந்த இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் உருவப்படத்தை அணிந்து கொண்டு விழிப்புணர்வு பேரணி நடத்தினர் இந்தப் பேரணியை ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் ஆண்டாள் ராம்குமார் தொடங்கி வைத்தார்.
வட்டார கல்வி அலுவலர்கள் மருதநாயகம், ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழிப்புணர்வு பேரணையானது ஸ்ரீரங்கம் ரங்கவிலாஸ் மண்டபத்தில் துவங்கி கீழச்சித்திர வீதி வழியாக மீண்டும் டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியே வந்து அடைந்தது. நிகழ்ச்சியில் ஏழாவது வார்டு மாமன்ற உறுப்பினர் ராதா மூணாவது வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வி தலைமை ஆசிரியை லில்லி புளோரா மற்றும் கிழக்கு ரங்கா பள்ளி தலைமை ஆசிரியர் சைவராஜ் தொண்டு நிறுவன மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.