திருவெறும்பூர் அருகே வாகனம் மோதி ஐடி பார்க் பெண் இன்ஜினியர் பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இது பற்றிய விவரம் வருமாறு.
திருவெறும்பூர் அருகே உள்ளது நவல்பட்டுபர்மா காலனி இங்கு 15 வது தெருவில் வசித்து வருபவர் குமாரமங்கலம் துவாக்குடியில் தனியார் கம்பெனியில் டிரைவராக பணி செய்து வருகிறார் இவரது மூத்த மகள் காயத்ரி வயது (25) இவர் பி.இ.எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படித்துள்ளார் நவல்பட்டு போலீஸ் காலனி பகுதியில் இயங்கி வரும் ஐ டி பார்க்கில் உள்ள தனியார் கம்பெனியில்ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ்வாக கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வருகிறார் இன்று காலை 6 மணி ஷிப்டுக்கு செல்வதற்காக தனது டூவீலர் வாகனத்தில் நவல்பட்டு பர்மா காலனியிலிருந்து ஐடி பார்க் செல்லும் மேட்டு கட்டளை வாய்க்கால் ஆற்றங்கரை சாலை வழியே சென்று கொண்டிருந்தார்.
ஆர்டிஓ ஆபீஸ் அருகே சென்ற பொழுது அவ்வழியே சென்ற மற்றொரு டூவீலர் வாகனம் மற்றும் ஐடி பார்க் கம்பெனி ஊழியர்கள் பணிக்குச் செல்லும் பஸ் சென்றுள்ளது.இதில் இரண்டு வாகனங்களில் எந்த வாகனம் இவர் மீது மோதியது என்று தெரியவில்லை டூவீலருடன் கீழே விழுந்த காயத்ரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.ஐடி பார்க் பஸ்ஸில் பயணித்த சக ஊழியர்கள் உடனடியாக இவரை நவல்பட்டு பர்மா காலனியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் காயத்ரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் காயத்ரியின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற் கூர் ஆய்வுக்கு அனுப்பி வைத்து இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் இச்சம்பவம் நவல்பட்டு ஐடி பார்க்,பர்மா காலனி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.