அதிமுக முன்னாள் சட்டமன்ற அரசு கொறடா துரை கோவிந்தராஜன் காலமானார் அவரது இருந்து சடங்கில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் செல்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வந்த ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்:-
அப்போது திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பிகள் தான். ஆனால் அவர்கள் பயணிக்கும் பாதைகள் வேறு – அதிமுகவில் தொண்டர்கள் இடையே ஒற்றுமையுள்ளது, ஆனால் தலைமையில் தான் பிரச்சனை உள்ளது என்ற மாயத்தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அதிமுகவில் பிளவு ஏற்படுத்தி இரண்டாம் இடத்தைப் பிடிக்க பாஜக திட்டமிடுவதாக வரும் செய்திகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிமுகவையோ அதன் தொண்டர்களையோ யாரும் பிளவு படுத்தி பார்க்க முடியாது – அதிமுகவை யாரும் மிரட்டவும் முடியாது. அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த டிடிவி அதிமுகவுடன் கூட்டணி சேர தயார் என அறிவித்துள்ளது நல்ல கருத்து அதனை நான் வரவேற்கிறேன் – தஞ்சாவூரில் வாய்ப்பு இருந்தால் அவரை நேரில் சந்தித்து பேசுவேன்.
அதிமுக தலைமைக்கு ops ம் ஆட்சி நிர்வாகத்தில் இபிஎஸ் என பழைய நிலை ஏற்பட்டால் இருவரும் இணைய வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு இது தொண்டர்களுக்கான இயக்கம் தொண்டர்களை யாரும் பிரிவுபடுத்தி பார்க்க முடியாது – எங்களை பொறுத்த வரை ஜனநாயகரீதியில் இயக்கம் செயல்பட வேண்டும். வெளிப் படத்தன்மை இருக்க வேண்டும். எந்த நோக்கத்திற்காக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் சட்ட விதிகளை உருவாக்கினாரோ அந்த சட்ட விதிகளுக்கு ஒரு சின்ன மாசு,பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதே இப்போதைய தர்மயுத்தம் எனக் கூறினார்…