திருச்சி கருமண்டபம் அசோக் நகர் தெற்கு முதலாம் வீதி, இரண்டாம் வீதி, வசந்த நகர், IOB காலனி மேற்கு மற்றும் கிழக்கு விஸ்தரிப்பு பகுதிகளில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.
இப்பகுதிகளில் நடைபெற்று வரும் புதை வடிகால் பணிகள் மற்றும் புதை வடிகால் பணிகள் முடிந்த பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட அவர் கடந்த சில நாட்களாக திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் இந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேரும் சகதியுமான சாலைகளை பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஏற்றவாறு கப்பிகளை கொட்டி தற்காலிக நடைபாதையை பொதுமக்களுக்காக ஏற்படுத்த உத்தரவிட்டார்.
மேலும் இப்பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தி மற்றும் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களை நேரில் ஆய்வு செய்தார். மேலும். அப்பகுதியை உதவி பொறியாளர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்கவும் தண்ணீர் தேங்கி உள்ள இடங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இந்தநிகழ்வில் பகுதி செயலாளர் மோகன்தாஸ்,வட்ட செயலாளர் பி ஆர் பி பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்…