கொரோனா நோய் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் இன்று துவங்கியது. அதன்படி திருச்சி மேலபுலிவார் ரோடு பகுதியில் உள்ள தேவர் ஹாலில் 18 வயது முதல் 44 வயது உள்ள ஆண்கள், பெண்கள், இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் ஆர்வத்தில் தேவர் ஹால் முன்பாக குவிந்தனர்.
இதனால் மருத்துவ பணியில் இருந்த ஊழியர்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக கேட்டை இழுத்து மூடினர். இதனால் பொதுமக்களுக்கும் மருத்துவ பணியாளர்கள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து சமூக இடைவெளியுடன் வரிசையில் நிற்கும்படி அறிவுறுத்தி சென்றார். உடனடியாக தேவர் ஹால் கேட் முன்பாக கூடியிருந்த கூட்டத்தினரை உள்ளே அனுமதித்தனர்,
அதன்பிறகு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.