தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை திருச்சி மாநகராட்சி, மத்திய மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், பள்ளி கல்வித்துறை மற்றும் தேசிய பசுமை படை இணைந்து காற்று மாசு படுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சி தேசிய மேல்நிலை பள்ளி வளாகத்தில் தொடங்கியது.
பேரணியை மாநகராட்சி உதவி ஆணையர் குமரேசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் நாம் சூழ்ந்திருக்கும் நீர் நிலம் காற்று மண் போன்றவற்றை பாதுகாப்பது குறித்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த பேரணியானது திருச்சி நேஷனல் பள்ளி முன்பு தொடங்கி
மெயின் கார்ட் கேட் வழியாக சிங்கார தோப்பு ஹோலி கிராஸ் காலேஜ் சாலை வழியாக மீண்டும் பள்ளியை வந்து அடைந்தது இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு காற்று மாசுபடுவது குறித்த விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பி பேரணியாக சென்றனர்.