இன்று முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் கறி கடை மற்றும் மீன் கடைகள் செயல்படலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் இயங்கி வந்த மீன் மார்க்கெட்டுகளான காந்தி மீன் மார்க்கெட், புத்தூர் மீன் மார்க்கெட் இயங்கிக் கொண்டிருந்த நிலையில், தற்போது குழுமணி சாலையில் மீன் மமீன் மார்க்கெட் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியைப் கடைபிடிக்காமல் மார்க்கெட்டில் கூடுவதால் தொடர்ந்து கொரோனா நோய் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதை கருத்தில் கொண்டு திருச்சி மத்திய ஜங்ஷன் பஸ் நிலையத்தில் மொத்த மீன் மார்க்கெட் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.அதனைத் தொடர்ந்து இன்று காலை திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மொத்த மீன் மார்க்கெட் போடப்பட்டுள்ளது. மேலும் இங்கு மீன்களை வாங்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை மொத்த வியாபாரத்திற்கு மட்டுமே அனுமதி என அறிவிப்பு உள்ளதால் இன்று குறைந்த அளவே கூட்டம் காணப்பட்டது.