திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெருவைசேர்ந்த பொதுமக்கள் புதிதாக சூசையப்பர் சிலையை வைத்தனர். இது குறித்து பனையக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்ததும் பனைய குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவியின் கணவர் பார்த்தசாரதி ஆட்கள் உடன் சென்று சாலையின் குறுக்கே சிலையை வைத்துள்ளதாக கூறி கடந்த 30 ஆம் தேதி சூசையப்பர் சிலையை சேதப்படுத்தி பொதுமக்களை அச்சுறிதுயதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கணவர் பார்த்த சாரதி மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் , மத நம்பிக்கைகளை எதிராக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி இன்று பணையகுறிச்சி பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் மேலும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் இதற்க்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்ததை தொடருந்து பொதுமக்கள் தர்ணா-வை கை விட்டனர்