தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பூல்பாண்டி. யாசகரான இவர் தான் யாசகம் பெறும் பணத்தை அரசுக்கும், இன்னபிற நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். 2010 ஆம் ஆண்டு முதல் அரசு பள்ளிகளுக்கு யாசகமாக பெற்ற பணத்தை நன்கொடையாக செலுத்தி வந்துள்ளார். கொரொனா காலத்தில் அரசின் கொரொனா நிவாரண நிதிக்கு பணம் உதவி யாசகம் பெற்று தந்துள்ளார். தொடர்ச்சியாக அவ்வப்போது யாசகம் பெற்ற பணத்தை அரசின் நிவாரண நிதிக்கு செலுத்தி வந்துள்ளார். அந்த வகையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பூல்பாண்டி ஆட்சியரை சந்தித்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
இது போல் யாசகம் பெற்ற பணத்தை நல்ல காரியங்களுக்கு கொடுப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதில் எந்த கஷ்டமும் எனக்கு இல்லை. நான் யாசகம் பெற்ற பணத்தை அரசு பள்ளிகளுக்கு வழங்குவதை தான் விரும்புகிறேன். இது வரை 50 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை அவ்வப்போது நான் வழங்கி உள்ளேன். எனக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால் நான் காமராஜரை நினைத்து கொள்வேன். அவர் பல கஷ்டங்களை அனுபவித்து நல்ல நிலைமைக்கு வந்தார். அவரை தான் நான் நினைத்து கொள்வேன் என்றார்.