மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், அரசு கேபிள் உள்ளிட்ட மாநில அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் காண்ட்ராக்ட் விடும் அரசாணைகள் 115, 139, 152 ஐ ரத்து செய்ய வேண்டும்.திருச்சி மாநகராட்சியில் குப்பை அள்ளும் பணியை தனியார் ஒப்பந்ததாரிடம் விடும் முறைகள் கைவிட வேண்டும்,
பல ஆண்டுகாலமாக குப்பை அள்ளும் பணியை செய்து வரும் தினக்கூலி தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
.
ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில செயலாளர் ஜெயபால், மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் செல்வி, மணிகண்டன், சிவக்குமார், சந்திரன், கருணாநிதி, எஸ்.கே. செல்வராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.