திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளரும் திருச்சி தெற்கு மாவட்ட தலைவருமான குடமுருட்டி கரிகாலன், பிச்சை ரத்தினம் ஆகியோரின் மகள் சுஜாதாவிற்கும் தேமுதிக கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளர் தங்கமணி, கவிதா ஆகியோரின் மகன் கதிருக்கும் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை தேசிய முற்போக்கு திராவிட கழக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த்
ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் பொதுமக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் எனவே, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள் ஈரோடு இடைத்தேர்தலில் தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.இடைத்தேர்தல் என்பது எப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.தேர்தல் ஜனநாயகமா அல்லது பணநாயகமா என்பதும் அனைவருக்கும் தெரியும்.
ஏற்கனவே, விஜயகாந்த் அவர்கள் அவரை பாராட்டி தங்கப் பேனாவை கொடுத்திருக்கிறார்.எனவே, எழுதாத பேனாவுக்கு நினைவு சின்னம் வைப்பது என்பது அதுவும் கடலில் வைப்பது தேவையில்லாதது. தேமுதிகவை தலைவர் விஜயகாந்த் மட்டுமே இயக்கி வருகிறார். இது எந்த கட்சியில் இருந்தும் பிரிந்து வந்த கட்சி அல்ல.மக்களது வரிப்பணத்தை கொண்டு பல திட்டங்கள் நிறைவேற்றப்படலாம் என தெரிவித்தார்.