திருச்சி களம் இலக்கிய அமைப்பு சார்பில் திருச்சிராப்பள்ளியின் ஊரும் வரலாறும் என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலாவின் நூல் அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது இவ்விழாவில் மருத்துவர் செந்தில்குமார் தலைமை வகித்தார் நூலின் சிறப்புகளைப் பற்றி எழுத்தாளர் பூ கோ சரவணன் சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்நூலில் திருச்சியில் காலூன்றி தமிழ்நாட்டை தழுவிய வரலாறுகள் மேலும் 160 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் இடம் பெற்ற சிறப்புகளையும் வீரமாமுனிவரின் வரலாறு கற்றவர்கள் தலை வணங்கும் கோயில் காலத்தால் மூத்த திருச்சி கல்லூரிகளின் சிறப்புகள் மகாத்மா காந்தி திருச்சிக்கு வந்த வரலாறுகள் என ஏகப்பட்ட சிறப்புகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் விழா அரங்கில் திருச்சிராப்பள்ளியின் ஊரும் வரலாறும் நூல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன இதனை தமிழ் ஆர்வலர்கள் ஆர்வமுடன் வாங்கினர் மேலும் இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வாளர்கள் கலந்து கொண்டனர் விழாவின் இறுதியில் ஜெயபால் நன்றி உரை கூறினார்