திருச்சி பழைய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகள் சாலை போக்குவரத்து விதிகள் பூங்காவில், போக்குவரத்து விதிகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு பயிற்சி தொடர்பாக பயிற்சியாளர்களுக்கான வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்தியபிரியா கலந்துகொண்டு போக்குவரத்து விதிகள் குறித்து மாவண மாணவிகளுடன் உரையாற்றினார்.
தொடர்ந்து போக்குவரத்து பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து விதிகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து காவலர்கள் மூலம் விளக்கப்பட்டது. இந்நிகழ்வில் 10க்கு மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் 300க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியாவிடம் பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கையெழுத்து வாங்கிக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.