மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேற்கு மாவட்ட தலைவரும், 28-வது வார்டு கவுன்சிலருமான பைஸ் அகமது தலைமையில் திருச்சியில் 15 இடங்களில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
அந்த வகையில் மனித நேய மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தலைமையில் திருச்சி உறையூர் 24 வது வார்டு குறத்தெரு பகுதியிலும், 10-வது வார்டு தாக்கர் ரோடு பகுதியிலும் 11-வது வார்டு ஜெயந்தி பஸ் ஸ்டாப் மூன்று இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி கொடி ஏற்றப்பட்டது இந்நிலையில் இன்று காலை இப்பகுதிகளில் ஏற்றப்பட்ட கட்சி கொடி கம்பத்துடன் அகற்றிய மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்ட தலைவர் ராஜா ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் உறையூர் காவல் நிலைய சாலையில் இருந்து பேரணியாக நடந்து சென்ற உறையூர் குறத்தெரு மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த கண்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் கென்னடி, தில்லை நகர் உதவி ஆணையர் ராஜூ மற்றும் உறையூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திருச்சியில் ம.ம.க கொடி அகற்றம் – மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து திடீர் சாலை மறியலால் பரபரப்பு.

அதனைத் தொடர்ந்து மறியல் போராட்ட இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி மாநகர துணை கமிஷனர் ஸ்ரீதேவி நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் அந்த பேச்சு வார்த்தையில் மீண்டும் மனிதநேய மக்கள் கட்சியின் கொடி அதே இடத்தில் வைக்கப்பட்டால் போராட்டத்தை கைவிடுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். கட்சிக்கொடி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது..