தமிழ் இணைய கல்வி கழகத்தின் சார்பில் மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரபரப்புரை குறித்த நிகழ்ச்சி திருச்சி ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக கவிஞர் மனுஷ்ய புத்திரன் தமிழகத்தில் நடந்த உணவு புரட்சியும் சமூக மாற்றமும் என்ற தலைப்பிலும், கவிஞர் நந்த லாலா தமிழரின் அறிவியல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
முன்னதாக கல்லூரி வளாகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டி செழுமையும் சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக இந்நிகழ்ச்சி அமைந்தது. மேலும் இதில் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.