அரசு மற்றும் தனியார் பள்ளி வேலையில்லா ஆசிரியர் சங்கத்தின் இரண்டாவது மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி விமான நிலையப் பகுதியில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் நாகை செல்லையா மற்றும் மாநில செயலாளர் சிவகலா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதன்மை விருந்தினராக தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் புயல் குமார் கலந்து கொண்டார்.
மேலும் சிறப்பு விருந்தினராக உச்ச நீதிமன்ற பார் அசோசியேசன் வழக்கறிஞர் கார்த்திக் பாபு மற்றும் தேசபக்தி நாளிதழ் ஆசிரியரும் தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தின் ஒருங்கிணைப் பாளருமான வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் தற்போது நடைபெறும் ஆட்சியாளர்களின் கொள்கை படி ஆசிரியர்கள் பணி அமர்த்த வேண்டும், மாவட்ட பதிவுமூப்பு அடிப்படையில் ஆணை வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.