இந்திய ராணுவத்தின் ஆட்சேர்ப்பு முகமை இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான நடைமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இயக்குனர் கர்னல் தீபக்குமார் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அப்போது பேசிய அவர் ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான அறிவிப்பு joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில்,
வருகின்ற மார்ச் 15 ஆம் தேதி வரை ஆர்வமுள்ளவர்கள் தங்களது ஆதார் கார்டு மற்றும் பத்தாம் வகுப்பு சான்றிதழை கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றும், அவ்வாறு விண்ணப்பிப்பவர்களுக்கு நேரடியாக உடல் தகுதி தேர்வு நடத்தப்படுவதற்கு முன்பாக பொது நுழைவு தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் 176 இடங்களில் இந்த பொது நுழைவு தேர்வு நடைபெறும் என்றும், திருச்சி மண்டலத்தை பொருத்தவரை திருச்சியில் இரண்டு இடங்களிலும், திருநெல்வேலியில் ஒரு இடம் என மொத்தம் மூன்று இடங்களில் பொது நுழைவு தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். நுழைவுத் தேர்வு கட்டணம் 500 ரூபாய், இதில் 250 ரூபாயை விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும் 50% செலவை ராணுவம் ஏற்கும். ஆங்கில மொழியிலும், இந்தி மொழியிலும் தேர்வு நடைபெறும் என்று தெரிவித்தார்.