தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை கோவில்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கோவில் வளாகத்தில் இலவசமாக 9 ஜோடிகளுக்கு திருக்கோவில் சார்பில் திருமண விழா திருச்சி மண்டல இணை ஆணையர் செல்வராஜ் மற்றும் சமயபுரம் கோவில் இணை ஆணையர் திருமதி.கல்யாணி தலைமையில் கோவில் குருக்கள் மந்திரங்கள் முழங்க திருமணம் நடைபெற்றது.
மேலும் மணமக்களுக்கு 4 கிராம் தங்கம், பீரோ, கட்டில், கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட வீட்டிற்கு உபயோகமான 160 பொருட்கள் சீர்வரிசையாகவும், சீர்வரிசைகளையும், 21 வகையான பலகார அடங்கிய குடம் ஆகியவற்றை கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கோவில் செயலர்கள் மணமக்களின் உறவினர்கள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.