திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது அதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறி வருகின்றனர். தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தினர் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பருத்தி மற்றும் மக்காச்சோளத்தை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சங்கத்தின் தலைவர் பூ விஸ்வநாதன் கூறுகையில்:-
மக்காச்சோளம் மற்றும் பருத்திக்கு உரிய லாபகரமான விலை கிடைக்கவில்லை இதற்கு காரணம் அதிகாரிகள் சிண்டிகேட் அமைத்து செயல்படுகிறார்கள். எங்களுக்கு மக்காச்சோளத்திற்கு விலை 30 ரூபாய் கொடுத்தால் தான் எங்களுக்கு லாபகரமான விலை கிடைக்கும் இன்றைய விலையில் 21 ரூபாய் 50 காசுக்கு எடுக்குகிறார்கள். அதேபோல் பருத்திக்கு கிலோ 100 ரூபாய் கொடுக்க வேண்டும் ஆனால் வெறும் 75 ரூபாய்க்கு எடுக்கிறார்கள். கடந்த மாதத்தில் 90 ரூபாய் வரை பருத்தி எடுத்திருக்கிறார்கள். மக்காச்சோளம் கடந்த வருடம் இதே நாள் குவின்டாலுக்கு 2500 ரூபாய்க்கு எடுத்துள்ளார்கள் அப்படி என்று பார்த்தால் மக்காச்சோளம் விவசாயிகளையும் பருத்தி விவசாயிகளையும் விவசாயிகளின் அடி வயிற்றில் அடித்து அடிமாட்டு விலைக்கு கேட்கிறார்கள் இதில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியரை நேரில் அழைத்து சிண்டிகேட் அமைத்து செயல்படும் அதிகாரிகள் மீதும் வியாபாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வியாபாரிகள் இவ்வளவுதான் விலை என நிர்ணயத்தால் அதிகாரிகள் அந்த விலைக்கு எடுக்கிறார்கள். அதற்கு கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய மாட்டார்கள். வியாபாரிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அதிகாரிகள் செயல்படுகிறார்கள் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. மக்காச்சோளம் குவிண்டாலுக்கு அரசு நிர்ணயித்தபடி எங்களுக்கு 13 முதல் 15 குவிண்டால் வரை மக்காச்சோளம் கிடைக்க வேண்டும் வெறும் 6 குவிண்டால் தான் கிடைக்கிறது. எங்களுக்கு பருத்தி மற்றும் மக்காச்சோளத்திற்கு பெரிய நஷ்டம் ஏற்படுகிறது உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு மக்காச்சோளத்திற்கு கிலோ 30 ரூபாய் வழங்க வேண்டும் அதேபோல பருத்திக்கு கிலோ 100 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழக ஆற்று மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தொடர்ந்து விவசாயிகள் மக்காச்சோளம் மற்றும் பருத்தி எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு அளித்து முறையிட்டனர்.மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததின் பெயரில் கலைந்து சென்றனர்.விவசாயிகளின் இந்த ஆர்ப்பாட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.